5 , 8_ஆம் வகுப்புக்கு பொது தேர்வு ”தேர்வு பயம் தான் அதிகமாகும்” கமல் எச்சரிக்கை…!!

5_ஆம் வகுப்பு மற்றும் 8_ஆம் வகுப்புக்கு கொண்டுவந்துள்ள பொது தேர்வை கண்டித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கண்டித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசு 10 ,11 , 12 ஆகிய வகுப்புக்கு பொது தேர்வு நடத்தி வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசின் புதிய சட்ட திட்டத்தால் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு என்ற முறையை இந்த ஆண்டு முதல் அமுல்படுத்த இருக்கின்றது. இதற்க்கு அரசியல் கட்சிகள் , ஆசிரியர் அமைப்புகள் , மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தேர்வு முறையை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் , 10 வயது பையன் மனதில் பொதுத்தேர்வு எனும் சுமையை கட்டி வைப்பது இந்த கல்வித்திட்டம்.நம் குழந்தைகளுக்குமன அழுத்தத்தை சொல்லிக்கொடுக்கும் இந்தத் திட்டத்தால் தேர்வு விகிதம் அதிகமாகாது. குழந்தைகளுக்கும் , பெற்றோர்களுக்கும் தேர்வு பயம் தான் அதிகமாகும். ஜாதிகளும் , மதங்களும் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை விட மதிப்பெண்களால் ஏற்படப்போகும் ஏற்றத்தாழ்வுகளால் தான் இப்போது பாதிப்பு அதிகமாக இருக்கப் போகிறது.இந்த பாதிப்பு சமூகத்தில் எதிர்நோக்கும் போது ஒரு குழந்தை இந்த சமூகத்தில் வாழ்வதற்கு நமக்கு தகுதியே இல்லையோ என்ற தாழ்வு மனப்பான்மை போல் மூழ்கிப் போகும்.

நான் எட்டாவது  படித்ததோடு என் படிப்பை நிறுத்திஎதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் இனி எந்த ஒரு குழந்தை இப்படி நிறுத்தினால் அதற்கு நீங்கள் இப்போது கொண்டு வந்திருக்கும் பொது தேர்வு மட்டும் தான் முக்கிய காரணமாக இருக்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எள்ளளவும் பயன் தராத இந்த புதிய கல்வித் திட்டத்தை மக்கள் நீதி மையம் வன்மையாக கண்டிப்பதுடன் இந்த திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்துகிறது.இதற்கு பதிலாக பள்ளி கட்டிடங்களை மேம்படுத்துவதும் ஆசிரியர்களை திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினால் மாற்றம் இனி எளிதாகும் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.