54,000 ஊழியர்கள் காலி…..பரிதாபத்தில் BSNL நிறுவனம்…..!!

BSNL  நிறுவனம் 54 ஆயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்தியத் தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் பின்னடைவை சந்திக்க தொடங்கியது. இதைதொடர்ந்து பொதுத்துறை நிறுவனமான BSNL லும் சரிவையே சந்திக்க ஆரம்பித்தது. கடந்த 2017-18 ஆண்டு இறுதிவரைBSNL நிறுவனம் ரூ.31,287 கோடி இழப்பை சந்தித்துள்ளது. அத்துடன் பிப்ரவரி மாதத்தின் சம்பளம் சரியான நேரத்தில் கொடுக்கபடவில்லை.மார்ச் மாதத்தில் பாதியில்தான் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை BSNL தன் வரலாற்றில் முதல் முறையாக சந்தித்துள்ளது.

BSNL jio க்கான பட முடிவு
இந்நிலையில், நிறுவனத்தை நஷ்டத்திலிருந்து மீட்டு புத்துயிர் கொடுப்பதற்கான முயற்சியில் BSNL  தீவிரமாக ஈடுபட் டு வருகிறது. தொலைத் தொடர்பின் செயலாளராக இருக்கும் அருணா சுந்தரராஜன், சமீபத்தில் BSNL நிறுவனத்திலுள்ள உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, நிறுவனத்தின் பங்கு முதலீடுகளை குறைக்க முடியுமா..? முடியாதென்றால் நிறுவனத்தை மூடிவிடலாமா என்பது குறித்து அனைத்து வழிகளிலும் ஆராய 10 முக்கிய ஆலோசனைகளை வழங்கினர். இந்நிலையில், குழு வழங்கிய 10 ஆலோசனைகளில் மூன்றிற்குBSNL  சம்மதம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, BSNL  நிறுவனம் 54,000 ஊழியர்களைப் வேலை நீக்கம் செய்ய சம்மதம் அளித்துள்ளதாக தெரிகிறது.

bsnl employee க்கான பட முடிவு
இத்துடன், பணி ஓய்வு வயதை 60-லிருந்து 58 ஆக குறைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அப்படி செய்தால், ஒரே ஒரு முடிவில் 33,568 ஊழியர்கள் பணி இழக்க நேரிடும். கடன் தொகையை ஈடுபடுத்த BSNL  நிறுவனம் இத்தகைய  நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஏனெனில் இந்த முடிவு மூலம் 13,895 கோடி ரூபாய் தொகைBSNL  நிறுவனம் சேமிக்கும்.விருப்ப ஓய்வுக்கான (VRS) வயதினை 50 ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் BSNL ஊழியர்களின் சராசரி வயது வரம்பு 55 ஆக மாற்றப்படும். இருப்பினும், பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடுவதாக எண்ணமில்லை என்றும் அக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.