52 சீன செயலிகளைத் தடை செய்யப் புலனாய்வுத்துறை கோரிக்கை!

சீன செயலிகளான டிக் டாக், யூசி ப்ரவுசர், கிளீன் மாஸ்டர் உள்ளிட்ட 52 செயலிகளை தடை செய்ய மத்திய அரசுக்கு புலனாய்வுத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

சீன மொபைல் செயலிகள் மூலம் பயனாளிகள் விவரங்கள் திருடப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. ஜூம் என்னும் வீடியோ அழைப்பு செயலியால் உலக அளவில் கடும் புகார்கள் எழுந்ததால், கடந்த ஏப்ரல் மாதம் தைவான்,ஜெர்மன் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை மற்றும் அமெரிக்க நாடாளுமன்றம் ஆகியவை இந்த செயலியை உபயோகிப்பதை தவிர்க்க அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து இந்தியாவும் ஜூம் செயலி பயன்பாட்டை குறைக்க வேண்டும் அல்லது அடியோடு நிறுத்த வேண்டும் என பொதுமக்களை கேட்டுக் கொண்டது.

இந்நிலையில் இந்திய புலனாய்வுத்துறை 52 சீன செயலிகளை பட்டியலிட்டுள்ளது. இந்த செயலிகள் பாதுகாப்பற்றது எனவும், இவற்றின் மூலம் பயனாளிகள் விபரங்கள் வெளிநாட்டுக்கு செல்ல கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆகையால் இந்த 52 சீன மொபைல் செயல்களையும் முழுமையாக தடை செய்யவோ அல்லது மக்கள் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *