50 கி.மீ வேகத்தில் காற்று… ”மீனவர்கள் கடலுக்கு செல்லாதீங்க” எச்சரிக்கை..!!

குமரி கடல் பகுதில் காற்றின் 50 KM வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை  நுங்கபாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களின்ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் , நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. அதே போல தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்.

Image result for வானிலை ஆய்வு மையம் மீனவர்கள்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரம்பலூரில் 8 சென்டி மீட்டர் மழையும் , வால்பாறையில் 7  செண்டி மீட்டர் மழை பதிவாகிள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்_ஆகவும் , குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியசும் இருக்கும்.  குமரி கடல் பகுதியில் காற்று மணிக்கு 40-தில் இருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு குமரிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.