50,000 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி உறுதி… டிடிவி தினகரன்…!!!

கோவில்பட்டியில் 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெறுவேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது. அதன்படி வாக்காளர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று காலை 7 மணிமுதல் வாக்களித்து வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான இடங்களில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டதால் வாக்கு செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் கோவில்பட்டியில் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். துரோக சக்திகள் ஆட்சிக்கு வர மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். அமமுக வேட்பாளர்கள் 10 கோடி, 20 கோடிக்கு விலை வாங்கப்பட்டது கசப்பான உண்மைதான்.தோல்வி பயத்தால் தொண்டாமுத்தூரில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.