“காட்டாறு வெள்ளம்” 500 ஏக்கர் பயிர்கள் சேதம்… சோகத்தில் விவசாயிகள்..!!

ராசிபுரத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால்  வெள்ளம் ஏற்பட்டு 500 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.  

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த புதுப்பட்டி, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கரிய பெருமாள் கோவில், உப்புக்கள் தட்டு, உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் நீர் புகுந்தது அங்கு பயிரிடப்பட்டு இருந்த நெல், வெங்காயம், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன.

Image result for வெள்ளம் பயிர்கள் சேதம்

மேலும் பங்களா சாலையில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளது. எனவே முறையாக ஓடைகளை தூர்வாரி சேதமடைந்த பாலத்தை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரியும் அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம்  கோரிக்கை விடுத்துள்ளனர்.