உலகின் மிகப் பெரிய ஆன்லைன் வியாபார தளமான அமேசான் நிறுவனமானது தொடர்ந்து தன் வேலையாட்களை பணிநீக்கம் செய்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் Amazon Web Services (AWS), Twitch, advertising, HR போன்ற துறைகளில் 9000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதோடு கடந்த வாரத்தில் மட்டும் பீப்பிள் எக்ஸ்பீரியன்ஸ் அண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் (பிஎக்ஸ்டி) துறையிலிருந்து சில ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் மீண்டும் இந்தியாவிலுள்ள 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்வது குறித்த அறிவிப்பை அமேசான் நிறுவனமானது தற்போது வெளியிட்டு உள்ளது. அதுமட்டுமின்றி இந்த பணி நீக்கம் இன்னும் தொடர உள்ளதாகவும் ஜெஃப் பெசோஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமேசான் தலைமை நிர்வாக அதிகாரியான ஆண்டி ஜாஸ்ஸி இது நிறுவனத்தின் நீண்டகால நலனுக்காக எடுக்கப்பட்ட கடினமான முடிவு எனவும் கூறி உள்ளார்.