அடடே சூப்பர்!…. 50 நகரங்களுக்கு ட்ரூ 5G சேவை…. அதிரடி காட்டும் ரிலையன்ஸ் நிறுவனம்….!!!!

6-வது இந்திய கைபேசி மாநாட்டில் 5G சேவை பிரதமர் மோடி தலைமையில் கடந்த அக்,.1 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. நாட்டின் முன்னணி நெட்வொர்க் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ வோடபோன் ஐடியா ஆகியவை இந்த 5G இணைய சேவையை ஏலம் எடுத்திருக்கின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் ட்ரூ 5G சேவையை மேலும் 50 நகரங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரிவாக்கம் செய்து உள்ளது.

அந்த வகையில் ஜியோ ட்ரூ 5G சேவை 184 நகரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதாக ரிலையன்ஸ் நிறுவனமானது தெரிவித்து உள்ளது. அதோடு இந்த நிறுவனம் 50 நகரங்களில் இன்று (ஜன,.24) தன் உண்மையான 5G சேவைகளை மிகப் பெரிய அளவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இப்போதுவரை 184 நகரங்களில் உள்ள ஜியோ பயனர்களுக்கு 5G சேவை கிடைத்து வருகிறது.

அதுமட்டுமின்றி 2023 டிசம்பர் மாதத்துக்குள் ஆந்திரா, அசாம், சத்தீஸ்கர், கோவா, ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்திரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் நடைமுறைப்படுத்த அந்தந்த மாநில நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Leave a Reply