“5 வருஷமா குழந்தை இல்லை” வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

புதுச்சேரியிலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பண்ணை நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மணிமாலா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணம் நடைபெற்று 5 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் கார்த்திகேயன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மேலும் கடந்த ஒன்றரை மாதங்களாக மணிமாலா தனது தாயார் வீட்டில் தங்கி வருகின்றார். இந்நிலையில் கார்த்திகேயன் சாப்பிடுவதற்காக மதியம் வேளையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது சகோதரர் ராஜேஷ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கார்த்திகேயனை ஜிம்மர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் கார்த்திகேயன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அவரது தந்தை குமார் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply