சட்டவிரோதமான செயல்…. 5 வாலிபர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஐந்து பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தில் வசிக்கும் காமராஜ், செந்தில்வேல், அன்புமணி, சுப்பிரமணியன், சின்னதுரை என்பது தெரியவந்தது. இவர்கள் அப்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அன்புமணி உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply