கொரோனா பாதித்த 5 பேருக்கு சேலத்தில் சிகிச்சை – அமைச்சர் விஜயபாஸ்கர் ..!!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக  5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேர் இந்தோனோசியாவில் இருந்து சுற்றுலா வந்தவர்கள். ஒருவர் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். இவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் கடந்த 22ம் தேதி முதல் சேலம் மருத்துவ கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர்களின் ரத்த மாதிரிகள்  சென்னைக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டதில் 5 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 15,492 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 2.9 லட்ச பயணிகளுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா ? என பரிசோதிக்கப்பட்டது. இதுவரை 890 பேரின் மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டதில் 757 பேருக்கு கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டது. கொரோனா அறிகுறியுடன் இருந்த 110 பேரின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டு முடிவுக்கு காத்திருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *