“கார் லாரி மோதி கொடூர விபத்து” குழந்தை உட்பட 5 பேர் பலி…!!

ஆலங்குளம் அருகேயுள்ள  கரும்புளியூத்தில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் கைக்குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம் அருகேஉள்ள  கரும்புளியூத்து  என்ற இடத்தில் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் இந்த சாலையில், இன்று 6 மணியில் இருந்து 6.30க்கு திருநெல்வேலியில் தென்காசி நோக்கி ஸ்விப்ட் காரும் , தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் காரின்  முன்பகுதியின் 75 சதவீதமான பகுதி லாரிக்குள் சென்றது. இந்த கொடூர விபத்தில், காரில் இருந்த குழந்தை 5 பேர் உடல் நசுங்கி பலியாகினர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் , தீயணைப்பு படையினர் லாரியில் சிக்கிய காரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காரில் சென்றவர்கள் அனைவரும் இறந்து விட்டதால் முழுமையான விவரம் கிடைக்கவில்லை. ஆனாலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *