“கார் விபத்தில் சிக்கி 5 பேர் பலி” திருநெல்வேலி அருகே சோகம்…!!

ஆலங்குளம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பொதுமக்களிடையே  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த உள்ள கரும்புளியூத்தி சாலையில்  காரில் 5 பேர் சென்றுக்கொண்டிருந்தனர் . அப்போது அங்கு எதிர்பாராத விதமாக லாரி அவர்கள் மீது படுபயங்கரமாக மோதியதில்  காரில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்கள் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காருக்குள் சிக்கிய 5 பேரின் உடல்களை தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் மீட்டெடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.