உலக புள்ளி விபரம் எனும் பெயரில் டுவிட்டர் கணக்கு வெளியிட்ட ஒரு பட்டியலில் உலகின் 8 பணக்கார நடிகர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளனர். இப்பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்திய நடிகர் ஷாருக்கான் மட்டுமே ஆவார். உலகின் பணக்கார பட்டியலில் ஷாருக்கான் இப்போது 4வது இடத்தில் இருக்கிறார்.

ஜெர்ரி சீன்பீல்ட் முதல் இடத்திலும், டைலர் பெர்ரி 2வது இடத்திலும், டுவைன் ஜான்சன் 3வது இடத்திலும் இருக்கின்றனர். அதனை தொடர்ந்து டாம் குரூஸ், ஜாக்கி சான், ஜார்ஜ் குளூனி, ராபர்ட் டி நிரோ ஆகியோர் அடுத்தடுத்த வரிசையில் உள்ளனர். இதனிடையில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், சென்ற 5 வருடங்களில் ஷாருக்கானின் ஒரு படம்கூட வெளியாகவில்லை.