துருக்கி நாட்டில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்7.8 ஆக பதிவாகியது. இது அந்நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 5000ஐ கடந்துள்ளது. மேலும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து நேற்று பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கமும் 6.0 ரிக்டர் அளவில் மூன்றாவது நிலநடுக்கமும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டாவது நாளான இன்று மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 என பதிவாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இது அந்நாட்டு மக்களை பீதியடைய செய்துள்ளது.

இந்நிலையில் துருக்கி நாட்டில் 5 வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இரு நாடுகளிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்படுவதால் மக்கள் கட்டிடங்களுக்குள் செல்லாமல் வீதியிலேயே அச்சத்துடன் தவித்து வருகின்றனர். இதனை அடுத்து பயங்கர நிலநடுக்கத்தினால் துருக்கியிலும் சிரியாவிலும் சுமார் 5000 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.