5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி…. இங்கிலாந்து அணியினர் புதிய சாதனை…!!!

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்போது பர்மிங்ஹாமில் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 4 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் நேற்று 5-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்த மேட்சில் இங்கிலாந்து 2 விக்கெட்டுகளை விட்டுக் கொடுத்து வெற்றி பெற்றதால் 2-2 என்ற கணக்கில் மேட்ச் சமநிலையில் முடிந்தது.

இதில் இங்கிலாந்து அணியினர் 378 ரன்கள் எடுத்து புதிய சாதனையை படைத்துள்ளனர். அதாவது கடந்த 2019-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எடுத்த 359 ரன்களே அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது 378 ரன்கள் எடுத்து சாதனையை முறியடித்துள்ளது. இந்த மேட்சில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரண்டன் மெகல்லன் ஆகியோர் சிறப்பாக ஆடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *