5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை….. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை….!!!!

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடக்கத்தில் மிதமாக பெய்து வந்த மழை தற்போது பல பகுதிகளில் கனமழையாக பெய்து வருகிறது. இதையடுத்து இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலப்புரம் மாவட்டத்திற்கு நாளையும் மேலும் ஒன்பது மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமையும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்து 24 மணி நேரத்தில் 20 சென்டிமீட்டருக்கும் மேல் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதை ஆரஞ்சு எச்சரிக்கை குறிக்கின்றது. மேலும் கடலில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *