மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள நாலாசோபாராவில் ஒரு பள்ளி ஆசிரியர் தனது மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு 14 வயது ஆகும். இந்த சம்பவம் மார்ச் முதல் ஜூலை வரை நடந்துள்ளது. ஆசிரியர் தனது வீட்டில் நடத்தும் தனியார் பயிற்சி மையத்திற்கு மாணவியை அழைத்து வந்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த சம்பவம் வெளியானதும், ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர். பள்ளி நிர்வாகம் குற்றவாளியை மறைத்து வைத்ததாக குற்றம் சாட்டினர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரை கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர், ஆசிரியர் பல மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் பள்ளி நிர்வாகம் இது குறித்து மறைத்து வைத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.