இன்றையகாலகட்டத்தில் பெரும்பாலான பிள்ளைகள் தங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை அவர்களின் வயதான காலத்தில் கவனிக்காமல் முதியோர் இல்லங்களில் கொடு பொய் சேர்த்து விடுகிறார்கள். இதனால் அந்த பெற்றோர்கள் மனதளவில் எப்படி பாதிக்கப்படுவார்கள் என்று பிள்ளைகளுக்கு தெரிவதில்லை. உ.பி.யைச் சேர்ந்த முதியவர் நாதுசிங்குக்கு(85) ஒரு மகன் மற்றும் நான்கு மகள்கள் உள்ளனர். மனைவி இறந்த பின், குழந்தைகளால் கைவிடப்பட்டு முதியோர் இல்லத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் அவரது ரூ.1.5 கோடி சொத்தை அரசுக்கு உயில் எழுதி வைத்துள்ளார். அந்த உயிலில், தன இறந்த பிறகு, உடலை மருத்துவக் கல்லூரிக்கு கொடுக்க வேண்டும் என்றும், “எனது நிலத்தில் என் பெயரில் பள்ளியோ, மருத்துவ மனையோ அரசு கட்டிக் கொள்ளலாம். ஆனால் என் பிள்ளைகள் என் இறப்புக்கு கூட இறுதி சடங்கு செய்யக் கூடாது” என்று எழுதி வைத்திருக்கிறார்.