5 ஜி சேவை வழக்கு…. “ரூ. 20 லட்சம் அபராத்தை குறைத்த நீதிபதி”…. இப்போ எவ்வளவு தெரியுமா?….!!!

 5 ஜி சேவை தொடர்பான வழக்கில் ஜூகி சாவ்லாவுக்கு டெல்லி ஹைகோர்ட்டில் ரூ.20 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது .

ஜூகி சாவ்லா இந்திய சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தமிழில் 1991-ஆம் ஆண்டு வெளியான ‘நாட்டுக்கு ஒரு நல்லவன்’ என்ற படங்களில் நடித்திருந்தார். இவர் பல மொழி திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றவர். ஜூஹி சாவ்லா திரைப்பட துறைகளைத தாண்டி சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற சமூக பணிகளில் ஈடுபட்டுவந்தார்.

இந்நிலையில் 5 ஜி சேவையை கொண்டுவந்தால் உயர் மின் காந்த அலைகளால் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறி டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கை விசாரனை செய்த  டெல்லி ஹைகோர்ட் அவருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்து  தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து  இந்த அபராத தொகையை குறைக்க வேண்டும் என்று கோரி மேல் முறையீடு மனுவை  தாக்கல் செய்தார் ஜூகி சாவ்லா. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் அபராத தொகையை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சம் ரூபாயாக  குறைத்து நீதிபதி உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *