5வது டெஸ்ட் போட்டி திடீர் ரத்து… ரசிகர்கள் அதிர்ச்சி!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட்  போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இன்று மாலை 3:30 மணிக்கு நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.. ஆனால் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், ரத்து செய்யப்பட்டுள்ளது.

4ஆவது டெஸ்ட் போட்டியின் போது பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், விளையாடுவதற்கு ஏற்ற சூழல் இல்லை என்று பிசிசிஐக்கு இந்திய வீரர்கள் கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் வெளியானது.. இந்திய வீரர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் என வந்த நிலையில், மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டுமுடிவுக்காக காத்திருந்தார்கள்..

இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 5வது டெஸ்ட்  போட்டியை ரத்துசெய்துள்ளது. பிசிசிஐயுடன் ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.. இருப்பினும் வீரர்களின் மன நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.. இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் முன்னணி வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *