அர்மீனியா-அஜர்பைஜான் நாடுகளிடையே மோதல்…. ராணுவ வீரர்கள் 49 பேர் பலி…!!!

அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளிடையே மோதல் ஏற்பட்டு சுமார் 49 ராணுவ வீரர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளிடையே கடந்த 2020 ஆம் வருடத்தில் செப்டம்பர் மாதத்தில் போர் நடந்தது. ஆறு வாரங்களாக தொடர்ந்த அந்த போரில் அர்மீனிய நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த நாக்ரோனா-கராபாக் மாகாணம் கைப்பற்றப்பட்டது. அந்தப் போரில் ஆறாயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர்.

ரஷ்ய அரசு அந்த இரு நாடுகளிடையேயான போரை முடிவுக்கு கொண்டு வந்தது. போர் நிறைவடைந்தாலும் இரு நாடுகளுக்குமிடையே மோதல் அடிக்கடி ஏற்படுகிறது. இந்நிலையில் இரண்டு நாடுகளின் எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்த இரண்டு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நள்ளிரவு நேரத்தில் மோதல் ஏற்பட்டது.

இதில், துப்பாக்கி சூடு தாக்குதல், பீரங்கி குண்டுகள் வீசி தீவிரமாக தாக்குதல் நடந்தது. அஜர்பைஜான் நாட்டைச் சேர்ந்த ராணுவத்தினர் உச்சகட்டமாக எல்லை மீறி தாக்குதல் மேற்கொண்டதில் அந்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 49 பேர் உயிரிழந்ததாக அர்மீனிய நாட்டின் பிரதமர் நேற்று கூறியிருக்கிறார்.