ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த சத்ய ஜீத் சமால் (34) திருமணத்திற்கு வரம் தேடும் வலைத்தளத்தில் விதவைகள் மற்றும் விவாகரத்தான பெண்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரிடம் சிக்கும் பெண்களிடம் தான் போலீஸ் என்றும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி பணம் பெற்று அவர்களை ஏமாற்றியுள்ளார்.
இதனைப் போலவே ஐந்து பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் இவர் செய்துள்ளார். இதுகுறித்து ஒரு பெண் அடித்த புகாரியில் அவரை கைது செய்து விசாரணை செய்ததில் இதுவரை 49 பெண்களை அவர் ஏமாற்றி உள்ளது தெரிய வந்துள்ளது.