“வேலூர் தேர்தல்”மொத்தம் 48 பேர் போட்டி..வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு…!!

வேலூர் மக்களவை தேர்தலில் போட்டிடுவதற்கான வேட்பு  மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

ஏப்ரல் 18ம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தல் போட்டியானது பணப்பட்டுவாடா நடைபெற்றதன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.இதையடுத்து தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

Image result for வேலூர் தேர்தல் வேட்புமனு தாக்கல்

மேலும் ஜூலை 11 முதல் 18 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது.இந்நிலையில் அதிமுக, திமுக, மற்றும் நாம் தமிழர் கட்சி உட்பட 48 பேர் வேட்பு மனுக்களை மாவட்டஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான சண்முக சுந்தரத்திடம் தாக்கல் செய்துள்ளனர்.