நாடாளுமன்ற மக்களவையில் நேற்றைய தினம் கேள்வி நேரத்தின் போது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்பாக எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதில் அளித்தார். அவர் கூறியதாவது, இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் தகவல் தொழில்நுட்பை ஏற்றுமதியை அதிகரிக்க அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் சிறிய மற்றும் புதிய நகரங்களில் டிஜிட்டல் வாய்ப்புகளை விரிவாக்கம் செய்வதில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. ஒரு ட்ரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரம் என்ற நோக்கில் அரசு மற்றும் பிரதமரின் தொலைநோக்கு பார்வையின் கீழ் ஒவ்வொரு இளைஞர் வசிக்கும் இடத்தையும் உறுதி செய்ய முடியும் என்றார்.
அதோடு டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் கூறினார். மேலும் கடந்த 3 வருடங்களில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்ப பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு விவரங்கள் போன்றவைகளை தேசிய மென்பொருள் சேவை நிறுவனங்கள் வெளியிட்டது. அதன்படி 2019- 20 ஆம் நிதி ஆண்டில் 150 பில்லியன் டாலர் அளவுக்கு தகவல் தொழில்நுட்ப பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று 2020-21ஆம் தேதி ஆண்டில் 151 பில்லியன் டாலர் அளவுக்கும், 2021-22 ஆம் நிதி ஆண்டில் 178 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 3 வருடங்களில் மொத்தமாக 479 பில்லியன் டாலர் மதிப்பு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.