“44% மக்கள் ஓட்டிற்காக பணம் வாங்க தயாராக உள்ளனர்” வெளியான அதிர்ச்சி தகவல்!!!…

வாங்கிய பணத்திற்கு ஈடு செய்யும் விதமாக நாங்கள் வாக்களிக்கிறோம் என்று மக்கள் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்த வரையில்  மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் பொழுது புதுசேரியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வழக்கம் அதிகமாக உள்ளது இது குறித்து தேர்தல் ஆணையத்துடன்  இணைந்து ஜனநாயக மறுசீரமைப்பு என்கின்ற அமைப்பு மாநிலம் முழுவதும் ஆய்வு செய்தது

இந்த ஆய்விற்கான  முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டதாவது ,  புதுசேரியில் 44% மக்கள் காசு வாங்கி கொண்டு அதற்கு ஏற்றார் போல் வாக்கு செலுத்துகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது

இவர்களில் 36% பேர் ஒட்டிற்கு  பணமும் பொருளும் முக்கியம் என்று கூறியுள்ளனர். 10 % பேர் ஒட்டிற்கு  பணம் மிக, மிக அவசியம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடுவது என்பது சட்டப்படி குற்றம் என்று 65 % பேர் தெரிவித்த நிலையில்  39 % பேர் பணம் வாங்குவதில் தவறு இல்லை என்றும், வாங்கிய பணத்திற்கு ஈடு செய்யும் விதமாக நாங்கள் வாக்களிக்கிறோம்   என்று கூறியுள்ளனர்