தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அசாம் மாநிலத்தில் சுமார் 43 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதை விட இந்த ஆண்டு சற்று தாமதமாக தொடங்கி , வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தற்போது தீவிரம் அடைந்து வெளுத்து வாங்கி வருகின்றது. குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் , அசாம், நாகாலாந்து, திரிபுரா உள்ளிட்ட வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் . மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.

அங்குள்ள பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. பிரம்மபுத்ரா ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடுகின்றது. அசாம் மாநிலத்தின் பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றது. அங்குள்ள 28 மாவட்டங்களில் சுமார் 43 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.