நேபாளத்தில் கனமழை ….வெள்ளம் , நிலச்சரிவுகளில் சிக்கி 43 பேர் பலி…!!

நேபாளத்தில் தொடர்ந்து பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 43 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நேபாளத்தில் கடந்த சில  தினங்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் அங்குள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது.  தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பல நகரங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு முற்றிலும் முடங்கியுள்ளது.
Image result for nepal rain

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு எங்கு பார்த்தாலும் தண்ணீரில் மிதக்கின்றது. இதனால்  ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளதாகவும் , 24 பேர் காணாமல் போய்யுள்ளதாகவும் ,  20 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.