41 வயதான தாய்க்கு…. 2ஆவது திருமணம் செய்து வைத்த மகன்…. எதற்காக தெரியுமா…??

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்தவர் யுவராஜ் ஷேலே. இவர் இளம் வயதிலேயே தன்னுடைய தந்தையை இழந்தவர். தன்னுடைய தந்தையை இழந்த அன்று முதல் அவரது தாய் தனியாக வசித்து வருகிறார். அப்போதிருந்து, தனி ஒருவராக கஷ்டப்பட்டு அவர் குழந்தைகளை வளர்த்து வந்தார்.

இந்நிலையில் தந்தையின் மறைவுக்குப் பிறகு தாய் வீட்டில் அனுபவித்து வரும் தனிமையைக் கண்டு, மனம் வருத்தப்பட்ட ஷேல் தனது தாய்க்கு ஒரு துணையை ஏற்படுத்த விரும்பினார். சரியான ஆளைத் தேடி, 41 வயதான தாயை திருமணம் செய்து கொள்ளும்படி சமாதானப்படுத்தி, திருமணம் செய்து வைத்தார்.