4000 பணியிடங்கள்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…. ரெடியா இருங்க….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.அதனால் அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 995 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யாமல் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 995 பேராசிரியர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு பணிவரன் முறை செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழக முழுவதும் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர்களை நியமிப்பதற்கான டிஆர்பி தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *