400 ஆதிவாசி குடும்பங்களுக்கு உதவிய நடிகர் ராணா…. குவியும் பாராட்டு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பொருளாதார ரீதியாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்கள் மட்டும் திரை பிரபலங்கள் என அனைவரும் உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழில் பெங்களூரு நாட்கள், காடன் உள்ளிட்ட படத்தில் நடித்திருந்தார் ராணா. இவர் 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு இந்த பேரிடர் காலத்தில் அவர்களுக்கு தேவையான மளிகைப்பொருகள் மற்றும் மருந்துப் பொருள்களை அளித்து உதவி செய்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் உள்பட பலர் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *