நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் பகுதியில் சந்திரசேகரன் (70)- வத்சலா (65) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு விமல் என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.‌ இவருக்கு 40 வயது ஆகிய நிலையில் இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் விமல் விரக்தியில் இருந்துள்ளார். இதனால் சம்பவ நாளில் விமல் தன்னுடைய தாய் தந்தை இருவருக்கும் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அதன் பிறகு தானும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்துள்ளார்.

சிறிது நேரத்தில் விமலுக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ராசிபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகாத விரத்தியில்  தாய்-தந்தையை கொலை செய்ய முயன்று  விட்டு அவரும் தற்கொலை செய்ய துணிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.