டெல்லியில் காற்று மாசு மோசமான கட்டத்திற்கு சென்றது. உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த பாதுகாப்பு மரபுகளை விட அங்கு காற்று அதிகமாக மாசுபட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சித்தார்த் சிங் கௌதம் என்பவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு அதிர்ச்சிகரமான பதிவை போட்டுள்ளார். அவர் நான் இந்தியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறி 2025-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் செட்டிலாக போகிறேன். அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. என்னால் 40% வரி செலுத்தி அசுத்தமான காற்றை சுவாசிக்க முடியாது. உங்களிடம் நிறைய பணம் இருந்தால் இந்தியாவை விட்டு வெளியே சென்று விடுங்கள். இதுதான் என்னுடைய கருத்து என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்படுகிறது.