4 பெண்கொலை… 4 ஆயுள் தண்டனை… மகளிர் நீதிமன்றம் அதிரடி..!!

சென்னையில் பெண்ணையும்  3 பெண் குழந்தைகளையும் கொலை செய்த வாலிபருக்கு 4 ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

கடந்த 2016- ஆம் ஆண்டு சென்னை ராயப்பேட்டை முத்து தெருவை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவர் தனது கணவரை பிரிந்து தனது 3 பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சின்னராஜ் பெண் குழந்தைகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதையடுத்து சின்னராஜ் உடனான தொடர்பை உடனே துண்டித்தார் பாண்டியம்மாள்.

Image result for prisonஇதனால் ஆத்திரமடைந்த சின்னராஜ் பாண்டியம்மாள் மற்றும் அவரது 3 பெண் குழந்தைகளையும் கொலை செய்து விட்டு தப்பி ஓடி தலைமறைவானார். அதன் பின்  அவர் மீது வழக்கு பதிவு செய்து ராயப்பேட்டை போலீசார் தேடி வந்த நிலையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கை விசாரணை செய்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா குற்றம் சுமத்தப்பட்டுள்ள சின்னராஜ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 4 கொலை வழக்குகளில் 4 ஆயுள் தண்டனைகளை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.