“ஆசிய சாதனை புத்தகம்”….. 4 வயதிலேயே இடம்பிடித்த சிறுவன்…. குவியும் பாராட்டு….!!!!

145 நாடுகளின் அடையாளங்களைக் சொல்லி சிறுவன் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானியில் சரத்பாபு-ரம்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் அம்ருத் வர்ஷன் என்ற மகன் இருக்கிறார். இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். இதில் சிறுவன் அம்ருத் வர்ஷன் சிறுவயதில் இருந்தே உலகம் வரை படங்களை பார்த்து நாடுகளின் பெயர்களை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தார்.

இதனிடையில் 4 வயதில் சிறுவன் 140 நாடுகளை  உலக வரைபடத்தில் அடையாளம் காணும் அளவுக்கு அறிவுத்திறன் பெற்றிருந்தார். தற்போது சிறுவன் அதையும் தாண்டி 195 நாடுகளின் பெயர்கள், தலைநகரங்களை தெரிந்து வைத்துள்ளார். மேலும் நாட்டின் கொடியை பார்த்தே அந்நாட்டின் பெயர், இந்த நாடு அமைந்துள்ள கண்டம் போன்ற விவரங்களையும் தெளிவாக கூறுகிறார்.

இதற்காக அண்மையில் சிறுவன் அம்ருத் வர்ஷன் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்து உள்ளார். இந்நிலையில் சிறுவனை சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கவிஞர் சினேகன், மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் முரளி அப்பாஸ், பேச்சாளர் இளங்கோ ஆகியோர் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *