மாணவியின் கன்னத்தில் “கேக்” தடவிய விவகாரம்…. சிறுவன் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் 15 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமி ஆறுமுக கவுண்டர் வீதியில் இருக்கும் பழனி ஆண்டவர் கோவில் அருகே நடந்து சென்ற போது நடுரோட்டில் வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 4 பேர் மாணவியின் கன்னத்தில் கேக் தடவியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி ஏன் இப்படி செய்கிறீர்கள் என தட்டி கேட்டுள்ளார்.

இதில் கோபமடைந்த நான்கு பேரும் சிறுமியை அடித்து உதைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அபிஷேக்(21), சஞ்சீவ்(19), சந்தோஷ்(20), 16 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply