மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற நபர்…. மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் பலி…. அதிர்ச்சி சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவசங்குப்பட்டி நடுத்தெருவில் குட்டி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் செம்மறி, வெள்ளாடு என 150 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் குட்டிராஜ் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு ஒட்டி சென்றுள்ளார். அப்போது ஏழாயிரம் பண்ணை அருகே மூடப்பட்ட அரசு மதுபான கடை அருகே கம்பிவேலியில் உரசியதால் 4 ஆடுகள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. உடனடியாக சுதாரித்துக் கொண்டு குட்டிராஜ் பிற ஆடுகளை விரைவாக ஓட்டி சென்றார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.