பா.ஜ.க VS திரிணாமுல் மோதலில் 4 பேர் பலி…. மேற்கு வங்கத்தில் நீடிக்கும் பதற்றம்…!!

பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

நடைபெற்ற மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு சரிக்கு சமமாக பாஜக வென்றதையடுத்து அங்கே தொடர் வன்முறை அரங்கேறி வருகின்றது. அங்குள்ள 24 பர்கானாஸ் மாவட்டம் கந்தேஷ்கலி என்ற இடத்தில் பா.ஜ.க சார்பில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் மற்றும் பதாகைகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அகற்றியதாக கூறப்படுகின்றது. இதனால் நேற்று இரவு இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மோதல்; 4 பேர் உயிரிழப்பு

இருவருக்கும் முற்றிய இந்திரா மோதலில்  பா.ஜ.க கட்சியின்  தொண்டர்கள் 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அக்கட்சியின் பொது செயலாளர் சயந்தன் பாசுவும் ,   திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டரை பா.ஜ.க_வினர் கத்தியால் குத்தி ,  துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக அந்த மாநில அமைச்சர் ஜோதிபிரியோ முல்லிக் தெரிவித்தார். இந்த வன்முறை சம்பவத்தால் மேற்கு வங்க மாநிலத்தில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.