கனமழையால் பாதிக்கப்பட்ட 3 மாநிலங்களுக்கு 4, 432 கோடி ஒதுக்கிய மத்திய அரசு..!!

கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகா, ஒடிசா, இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு  4,432. 10 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

தற்போது கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல இமாச்சல பிரதேசம், ஒடிஷா, உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் கடுமையான கன மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், சீரமைப்பு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Image result for amit shah flood

இந்நிலையில் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகா, ஒடிசா, இமாச்சல பிரதேச மாநிலத்தின் சீரமைப்பு மற்றும் பல்வேறு கட்ட பணிக்காக மத்திய அரசு 4,432. 10 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.