4 வயதில் உயிரிழந்த மகளுக்கு கோவில் எழுப்பிய தந்தை…. பலரையும் நெகிழ வைத்த சம்பவம்….!!!

ஆந்திர மாநிலத்தில் தனது மகளுக்கு பெற்றோர் கோவில் எழுப்பிய சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த செங்கையா மற்றும் லஷ்மி தம்பதியினருக்கு நான்கு வயதில் சுப்புலட்சுமி என்ற மகள் இருந்துள்ளார். செங்கையா வனத்துறையில் வேலை பார்த்து வருகிறார். 2011 ஆம் ஆண்டு அவரின் கண் முன்னே லாரி மோதிய விபத்தில் அவரின் மகள் சுப்புலட்சுமி உயிரிழந்தார்.

இதனால் மன துயரத்திற்கு உள்ளான செங்கையா தனது மகளின் நினைவாக கோவில் ஒன்றை எழுப்பியுள்ளார். இந்த கோவிலுக்கு 2011 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தினமும் வழிபாடு செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.