4 முறை திருமணம்… மிக பிரபல தமிழ் ஹீரோயின் அதிர்ச்சி….!!!

தனக்கு நான்கு முறை திருமணம் நடந்துள்ளதாக வதந்திகள் பரவி வருவது அதிர்ச்சி அளிப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான நடிகர் திலகம் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இசையமைப்பாளர் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளிவந்தன.

ஆனால் இருவரும் நண்பர்கள் தான் காதல் இல்லை என்று அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். மேலும் தனக்கு வெவ்வேறு நபர்களுடன் நான்கு முறை திருமணம் நடந்துள்ளதாக தொடர்ந்து வதந்திகள் பரவி வருவது அதிர்ச்சி அளிக்கிறது என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். சில இணையத்தளங்களில் எனக்கு 4 தடவை வெவ்வேறு நபருடன் திருமணம் நடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. நான் திருமணம் செய்ய இன்னும் காலம் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.