மகாராஷ்டிரா சட்டசபைக்கு நான்கு மாத குழந்தையுடன் வந்த சரோஜ் அகிரேவின் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பி உள்ளது. மகாராஷ்டிரா சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர்.

இதில் தேசியவாத காங்கிரஸை சேர்ந்த எம்எல்ஏ சரோஜ் அகிரே நான்கு மாத ஆண் குழந்தையுடன் கூட்டத்தொடரில் பங்கு பெற்றார். அவர் நாக்பூரில் கடந்த டிசம்பர் மாதத்தில் நடந்த குளிர்கால கூட்டத்தொடரிலும் குழந்தையுடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.