“4 மணி நேரம்” ஷாலினியோடு ரோட்டில் நின்ற அஜித்…. உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் இயக்குனர் ஏச். வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து துணிவு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு 70% க்குமேல் முடிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் மீதமுள்ள காட்சிகளை எடுப்பதற்காக படக்குழு பாங்காங் சென்றுள்ளது. இதனையடுத்து இந்த படத்தை அடுத்த வருடம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் பைக் மூலமாக உலகையே சுற்றிவர வேண்டும் என்று திட்டம் போட்டுள்ள அஜித் இந்த படத்தினுடைய அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு மீண்டும் பைக் ரைடு செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் 2010 ஆம் வருடம் தயாரிப்பாளர் தாணுவினுடைய மனைவி இறந்த பொழுது அஜித் தன்னோட மனைவி ஷாலினியோடு பைக்கில் வந்து ரோட்டில் நான்கு மணி நேரம் காத்திருந்தாராம். அப்போது சிங்கப்பூரிலிருந்து தாணு வந்து கொண்டிருந்ததாக கூறியுள்ளார். தன்னுடைய படத்தை தயாரித்த தயாரிப்பாளரின் சோகத்திற்கு ஆறுதல் கூறவும் சோகத்தில் பங்கு போட்டுக் கொள்ளவும் அஜித்தின் இந்த செயல் நெகிழ வைக்கும் விதமாக உள்ளது.