மீண்டும் 3_ஆவது அணி…. ஸ்டாலின் சந்திரசேகர் ராவ் சந்திப்பு…. மாற்றம் காணும் தேசிய அரசியல்…!!

இன்று மாலை திமுக தலைவர் மு.க ஸ்டாலினை, தெலுங்கானா மாநில முதல் முதல்வர்  சந்திரசேகர் ராவ் சந்திக்க இருக்கின்றார்.

பாராளுமன்ற தேர்தலுக்கான  6_ஆம் கட்ட  வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட  7-வது  வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகின்றார்.

3_ஆவது அணியை அமைக்கும் முயற்சியை முன்னெடுத்து வரும் சந்திரசேகர் ராவ் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களை சந்தித்து வருகின்றார்.  கடந்த வாரம் கேரள மாநில முதல்வர் பினராய் விஜயனை சந்தித்த அவர் இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலினை இன்று மாலை 4 மணிக்கு சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பால் மூன்றாம் அணி உருவாகுமா என்று தேசிய அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.