தமிழகம் முழுவதும் மதியம் 1 மணி வரையில் 39.49% வாக்கு பதிவு – சத்ய பிரதா சாஹூ தகவல்…!!

தமிழகம் முழுவதும் மதியம் 1 மணி வரையில்  39.49% வாக்குகள்  பதிவு  செய்யப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார். 

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வரகின்றனர். சினிமா பிரபலங்கள்  பலரும், அரசியல் கட்சி  தலைவர்களும் தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

Image result for வாக்கு பதிவு இயந்திரம்

இதனிடையே தமிழகத்தில் சில இடங்களில் வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டதால் வாக்கு செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து  தமிழகம் முழுவதும் 384 மின்னணு வாக்கு பதிவு இயந்திரமும்,  692 ஒப்புகை சீட்டு எந்திரமும்  மாற்றப்பட்டும்  வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. குறிப்பாக தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருண்மொழி பேட்டையில்  4 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு வாக்கு பதிவு நடை பெற்று வருகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான வாக்கு பதிவில்  தமிழகத்தில் மதியம் 1 மணி வரையில் 39.49% வாக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.