சட்டப்பிரிவு 370_ஆல் காஷ்மீர் பகுதியில் ஒரு சாரார் மட்டுமே பலன் அடைந்து வந்தனர் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்து ஜம்மு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதை தொடர்ந்து எந்த கருத்தும் கூறாத நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் , முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஜம்மு காஷ்மீர் லடாக் பகுதி மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டபட்டு வந்தன.

முந்தைய காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் எந்தப் பலனையும் அடையவில்லை. சட்டம் ரத்து செய்யப்பட்டதால் பழங்குடியின மக்கள் பலனடைந்துள்ளனர். 370 சட்டத்தால் காஷ்மீர் பகுதியில் ஒரு சாரார் மட்டுமே பலன் அடைந்து வந்தனர். காஷ்மீரில் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீட்டை இனி யாரும் தடுக்க முடியாது. 370 சட்ட பிரிவால் வளர்ச்சித் திட்டங்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. தற்போது தடைகள் நீக்கப்பட்டு உரிமைகள் நிலை நாட்டப்பட்டுள்ளது. பழங்குடியினர் மக்களின் உரிமைகள் நிலை நாட்டப்படும் என்றுக்கு மோடி தெரிவித்தார்.