350 போட்டி…..தொடர்ச்சியாக விக்கெட் கீப்பர்……. டோனி சாதனை …!!!

இன்று நடை பெற்று வரும்  உலக கோப்பை போட்டியில்  ஆடுவதன் மூலம் டோனி புதிய  உலக சாதனை  படைத்துள்ளார் ….

இன்று நடைபெற்று  கொண்டு இருக்கும்  இந்தியா நியூசிலாந்து  போட்டியின் மூலம் இந்திய கிரிக்கெட்  அணியின்   மகேந்திர சிங் டோனி, விக்கெட்  கீப்பராக தொடர்ச்சியாக 350  சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடிய  முதல் கிரிக்கெட் வீரர் என்ற உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்  . இலங்கை அணியின்  சங்கக்கரா 360 ஒருநாள் போட்டிகளில் விக்கெட்  கீப்பராக விளையாடினார் , இதில் 44 போட்டிகளில் சிறப்பு பேட்ஸ்மேனாக  களமிறங்கியுள்ளாரே தவிர தோனி போல தொடர்ந்து விக்கெட் கீப்பராக ஆடவில்லை.

Image result for இதுவரை 349 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் ஆடி உள்ள டோனி,

இதன் மூலம் இந்திய  அணியின் மாஸ்டர்  பிளாஸ்டர்  சச்சின் தெண்டுல்கருக்கு அடுத்தபடியாக 350-க்கு போட்டிக்கு  மேல்   விளையாடும் இரண்டாவது இந்திய அணி  வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இதுவரை 349 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் ஆடி  உள்ள டோனி, அதில், இந்திய  அணிக்காக 346 போட்டியும் , ஆசியா XI  அணிக்காக  3 போட்டிகளும்  விளையாடி உள்ளார்.இதன் மூலம் உலகளவில் 350 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் 10வது வீரர் என்ற சாதனையும் டோனி  படைத்துள்ளார் .