நாமக்கல் மாவட்ட போலீசார் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிடம் இருந்து 33 சவரன் தங்கத்தை மீட்டு, சேலம் சிறையில் அடைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் சேலம் சாலையில் சின்னார் பாளையம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சிக்கிய நபரை போலீசார் பிடித்து விசாரித்த போது பள்ளிபாளையம், எலச்சிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளை அடித்த ரத்தின குமாரி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் அவர் வைத்திருந்த துணிப் பையில் 17 சவரன் நகை மற்றும் உருக்கிய தங்கம் உட்பட 33 சவரன் தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரத்தின குமாரி சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.