தமிழகத்தில் 33 பேர் ….. இந்தியாவில் 127 பேர் ….. ISIS_சுடன் தொடர்பு ….. பகீர் தகவல் …!!

ISIS தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாக தமிழகத்தில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று INA தலைவர் அசோக் மிட்டல் தெரிவித்துள்ளார்.

NIA என்று சொல்லப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் தேசிய ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தீவிரவாதத்துக்கு எதிரான சிறப்பு போலீஸ் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கலந்துகொள்வதாக இருந்தது. பின்னர் அவர் கலந்து கொள்ள முடியவில்லை என்பதால் இந்தக் கூட்டத்திலேயே தேசிய பாதுகாப்புச் செயலாளர் அஜித் தோவல் கலந்துகொண்டார்.

இதில் பாகிஸ்தான் எப்படி தீவிரவாதத்தை இந்தியாவில் தொடர்ந்து தூண்டிவிடுகிறது , அதற்கான உதவிகளை பல்வேறு பணிகளை எப்படி செய்து வருகிறது , இதற்கான பணம் எப்படி வருகின்றது போன்ற விஷயங்களை குறித்து விவாதிக்கப்பட்ட்து. இதைத்தொடர்ந்து  பேசிய NIA அமைப்பின் தலைவரான இன்ஸ்பெக்டர் ஜெனரல் அசோக் மிட்டல் பேசும் போது  ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு மற்றும் அதன் காரணமாக இந்தியாவிலேயே ஏற்பட்டிருக்கும் தாக்கம் குறித்து பேசினார். இதில் நாடு முழுவதும் எத்தனை பேர் இந்த அமைப்பின் தொடர்பு காரணமாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் , என்னென்ன விசாரணை நடந்து வருகிறது போன்ற விவரங்களை குறிப்பிட்டார்.

அபோது அவர் தமிழகத்திலேயே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தொடர்புடன் சம்பந்தப்பட்டவர் என்று சந்தேகப்படும் 33 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்ற விவரத்தை தெரிவித்தார். இத்துடன் உத்தரப்பிரதேசத்தில் 19 பேர் , கேரளாவில் 17 பேர் மற்றும் தெலுங்கானாவில் 14 பேர் இதே காரணத்திற்காக கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்ட அவர் நாடு முழுவதும் இதே போல் 127 பேர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்ட அவர் , தீவிரவாதத்திற்கு எதிராக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் , அதற்கான சிறப்பு பிரிவுகள் எப்படி செயல்பட வேண்டும் , எப்படி தங்களுடைய அமைப்புக்குத் தேவையான தகவல்களை சேகரிக்க வேண்டும் , தீவிரவாதத்தை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் ஆலோசனை மேற்கொண்டார்.