33 அடி பொதுப்பாதை ஆக்கிரமிப்பு… நடிகர் சங்கத்திற்கு எதிரான மனு தள்ளுபடி…!!

பொதுப் பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டபடுவதாக தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை டி நகர் பகுதியில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் சுமார் 26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்திற்கான அஸ்திவாரப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் பில்லர்களை எழுப்புவதற்கான பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அப்போது கட்டிடம் இருந்த இடத்தில் இதற்கு முன்பாக 33 அடி அளவில் பொது பாதை இருந்தாக கூறப்பட்டது. 

Image result for chennai court

இதையடுத்து பில்லர் எழுப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அதே டி.நகர் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரால் குடியிருப்பு நலச்சங்கம் சார்பில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த மனுவின் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்து கட்டிடம் பொதுப்பாதையில் கட்டப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளது.